. பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டிஇந்திய ஜோடி !
பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் சீனாவின் ஹாங்சு நகரில் வரும் 17-21ல் நடக்க உள்ளது. உலகின் 'நம்பர்-3' ஆக உள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இதில் களமிறங்குகிறது.
உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், ஹாங்காங், சீன மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்தது. தவிர, மலேசியா ஓபன், இந்தியன் ஓபன் உட்பட 5 தொடர்களில்அரையிறுதிக்குள் நுழைந்தது.
'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் 'பி' பிரிவில் , தற்போது வேர்ல்டு, டூர் பைனல்ஸ் தொடரில், இந்திய ஜோடி இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற, மலேசியாவின் ஆரோன்சியா, சோ இக் (2வது இடம்), சீனாவின் லியாங் வெய், வாங் சங் (6), இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான், சோகிபுல் பிக்ரி (8) என வலுவான ஜோடி, இந்திய ஜோடிக்கு சிக்கல் தரலாம்.
0
Leave a Reply